”தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு…” என கெத்து காட்டும் கேரளத்து மீசைக்காரி!

ஆண்களுக்கான கம்பீர தோற்றம் என்றாலே மீசைதான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னாலும் மீசை முறுக்கி வீரமாக உலாவ முடியும் என்பதை இந்த உலகுக்கு எடுத்துரைத்திருக்கிறார்.
ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்களுக்கு மீசை வளரும். ஆனால் புருவத்தை தீட்டுவது போலவே உதட்டிற்கு மேல் வளரும் மீசை முடியை அகற்றுவதில் கவனமாக இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
image
ஆனால், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வளர்ந்திருக்கும் மீசையை அகற்றாமல் அது இருப்பதை பெருமையாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
கண்ணூரின் குத்துப்பறம்பை அடுத்த கோளயாடு பகுதியைச்ச் சேர்ந்தவர் ஷஜா என்ற 34 வயது பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
image
முதலில் ஷைஜாவுக்கு மீசை முளைத்த போது அதனைக் கண்ட பலரும் அவரை கிண்டலும், கேலிக்கும் ஆளாக்கினார்கள். அதனால் மன வேதனைக்கு ஆளான ஷைஜா, காலப்போக்கில் அதனை பெருமையாக ஏற்றுக்கொள்ள தொடங்கினார்.
மேலும் நான் மீசைக்காரியாகவே இருக்க விரும்பிகிறேன் எனவும், அது இருப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதுபோக, ஃபேஸ்புக்கில் மீசைக்காரி என்ற பக்கத்தையும் உருவாக்கி அதில் பல அதிரடி பதிவுகளையும் பகிர்ந்து கலக்கி வருகிறார் மீசைக்காரி ஷைஜா.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.