புதுடெல்லி: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கியதில் முதல் நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான 4 மாத காலத்தில் ரூ2,977 கோடி மதிப்பிலான கடன் உதவியை இலங்கை பெற்றுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசிய மேம்பாட்டு வங்கியானது ரூ2,810 கோடி கடனுதவி வழங்கி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இதனை தொடர்ந்து உலக வங்கியானது ரூ531 கோடி கடனுதவியை செய்துள்ளது. சீனா ரூ536 கோடி அளவிலான கடனுதவியை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த 4 மாத காலத்தில் மொத்தம் ரூ7,647 கோடி கடனுதவியை இலங்கை பெற்றுள்ளது.