நயன்தாரா பட பாணியில் பகத் பாசில்
சஜிமோன் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் மலையாளப் படம் மலையன்குஞ்சு. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்கிறார் மகேஷ் நாராயணன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் பகத் பாசிலுடன் ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாபர் இடுக்கி உள்பட பலர் நடித்துள்ளனர். பகத் பாசிலே தயாரித்துள்ளார்.
இந்த படம் நயன்தரா நடித்த 02 ஆக்சிஜன் என்ற படத்தின் சாயலை கொண்டது. அடிக்கடி நிலச் சரிவு நடக்கும் ஒரு மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த ஒரு சிறுமியை பகத் பாசில் மீட்பதுதான் படத்தின் கதை. வருகிற 22ம் தேதி வெளியாகும் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
மிரட்டலான இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் குறித்து கமல்ஹாசன் தனது தெரிவித்திருப்பதாவது: பகத்தின் குழந்தையும் என்னுடையது தான், எப்பொழுதும் மேன்மை வெல்லட்டும். பகத் முன்னேறுகிறார். எனது நண்பர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும். தோல்வி என்பது ஒரு தேர்வு அல்ல ஒரு குழு என்றால் என்ன என்பதை காட்டுங்கள். என்று எழுதியிருக்கிறார்.