புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கு கிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, அக்னிபாதை திட்டம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் கன்டோன்மென்ட் மசோதா, மாநிலங்களின் கூட்டுறவு சொசைட்டிகள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, தொழில்நிறுவன வளர்ச்சி மற்றும் சேவை மையங்கள் மசோதா, சரக்குகளுக்கான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா உட்பட 24 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதுதவிர சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்துக்கு எஸ்.சி.,எஸ்.டி., பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசியல் சாசன திருத்தத்துக்கு இரண்டு தனி மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 8 மசோதாக்கள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அவற்றையும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளது.
அனைத்து கட்சி கூட்டம்
மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் அக்னிபாதை திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ரதமர் நரேந்திர மோடி கலந்து ள்ளாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரகலாத் ஜோஷி கூறியதாவது:நாடாளுமன்றத்தில் பயன்படுத்த எந்த வார்த்தையும் தடைசெய்யப்படவில்லை. கடந்த 1954-ம் ஆண்டிலிருந்தே, பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலை மக்களவை வெளியிடுகிறது. நாடாளுமன்ற விதிமுறைகள்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. அரசு மீது குறை கூற எதிர்க் கட்சிகளிடம் ஒன்றும் இல்லை.
அதனால் பிரச்சினை இல்லாத விஷயங்களை, பிரச்சினையாக்கி, நாடாளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அரசு நல்ல பணிகளை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமை, உள்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப் படுகிறது.
அனைத்துகட்சி கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது ஏன்என காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்
பினார். 2014-ம் ஆண்டுக்கு முன் அனைத்து கட்சி கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எத்தனை முறை கலந்து கொண்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஜோஷி கூறினார்.