நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர வளர புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அதேபோல் புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காலாவதி ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத தேவை என்று கருதப்படும் டூத் பிரஷ் இனிவரும் காலத்தில் காணாமல் போகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டூத் பிரஷ்க்கு பதிலாக தற்போது பல்துலக்க மைக்ரோரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மைக்ரோரோபோட்கள் மிகவும் எளிமையாக பற்களை சுத்தம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக டூத்பிரஷ் தொழிலின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சோமேட்டோ ஊழியரின் மனித நேயம்.. 1 வயது குழந்தைக்காக எடுத்த ரிஸ்க்.. குவியும் பாராட்டுகள்!
மைக்ரோரோபோட்கள்
மைக்ரோரோபோட்கள் உடல்நலப் பராமரிப்பில் பல்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ளன. குறிப்பாக பல் துலக்க மற்றும் பற்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சரிசெய்ய இந்த மைக்ரோரோபோட்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம்.
பல் சுத்தம் செய்ய ரோபோட்கள்
காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க போராடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என கருதப்படுகிறது. எதிர்காலத்தில் மைக்ரோரோபோட் பல் துலக்குதல், பல் சுத்தம் செய்தல் மற்றும் பல் ஃப்ளோஸ் (Floss ) என அனைத்தும் பயன்படுத்தப்படலாம்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
இந்த மைக்ரோரோபோட்கள் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குழுவால் உருவாக்கப்பட்டது. மேலும் பல் குறைபாடுகள் உள்ளவர்கள், பல துலக்க சிரமத்தில் உள்ளவர்கள் தங்கள் பற்களை திறம்பட சுத்தம் செய்ய இதனை பயன்படுத்தலாம்.
எப்படி வேலை செய்கின்றன?
மைக்ரோரோபோட்கள் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. வினையூக்கி மற்றும் காந்த செயல்பாடுகளுடன் செயல்படும் இந்த மைக்ரோரோபோட்களின் இயக்கத்தை இயக்க காந்தப்புலம் பயன்படுத்தப்படலாம். இந்த மைக்ரோரோபோட்களில் உள்ள முட்கள் போன்ற பகுதி பல் துலக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்யும்.. அதேபோல் பற்களை எளிதாக ஃப்ளோஸ் செய்ய உதவும் வகையில் நீளமான சரங்கள் மைக்ரோரோபோட்களில் பொருத்தப்பட்டிருக்கலாம்.
பாக்டீரியாவை கொல்லும்
மேலும் வினையூக்க எதிர்வினைகள் நானோ துகள்களை ஆண்டிமைக்ரோபையல்களை உற்பத்தி செய்ய தூண்டும். இவை ஆபத்தான வாய்வழி பாக்டீரியாவை அந்த இடத்திலேயே கொல்லும் திறன் கொண்டது.
சோதனை
இந்த மைக்ரோரோபோட்கள் போலி மற்றும் உண்மையான மனித பற்கள் மீது சோதனை செய்தபோது, விஞ்ஞானிகள் இந்த நுண்ணுயிரிகள் பல்வேறு வடிவங்களை எடுத்து துவாரங்கள் மற்றும் ஈறு நோய்களையும் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று கண்டறிந்தனர்.
பற்களில் உள்ள துகள்கள்
பற்களில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நானோ துகள்களை காந்தப்புலங்கள் மூலம் வியக்கத்தக்க வகையில் கண்டுபிடித்து, அதனை கட்டுப்படுத்தும் திறன் இந்த மைக்ரோரோபோட்களுக்கு உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதாக இதனை வடிவமைத்தவர்களில் ஒருவரான எட்வர்ட் ஸ்டீகர் கூறியுள்ளார். மேலும் மைக்ரோரோபோட்கள் செயல்படும் விதம், ஒருவரின் கை எப்படி ஒரு மேற்பரப்பை நீட்டி சுத்தம் செய்யுமோ அதே போன்றது என்றும், இதனை கட்டுப்படுத்த கணினியை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
டூத் பிரஷ் தொழில் என்ன ஆகும்?
மைக்ரோரோபோட்கள் பயன்பாடு அதிகமானால் டூத்பிரஷ் பயன்பாடு குறைய வாய்ப்பு இருந்தாலும் அதற்கான காலம் இன்னும் அதிகம் இருக்கின்றது என்றும், அதற்குள் டூத்பிரஷ் தயாரிப்பாளர்கள் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்கள் தயாரிப்பில் வித்தியாசம் காட்டினால் அவர்களுடைய சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
No need tooth brushes in future… Microrobots Can Brush, Floss Teeth With Easily!
No need tooth brushes in future… Microrobots Can Brush, Floss Teeth With Easily! | பல் விலக்க மைக்ரோரோபோட்கள் அறிமுகம்… டூத் பிரஷ் வணிகம் இனி என்ன ஆகும்?