பள்ளி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றைய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

srimathi

பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

srimathi

அப்போது பேசிய டிஜிபி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து சரியான முடிவுக்கு வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி கேட்டுக் கொண்டார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.