பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் குறித்து சிஐடி விசாரணை ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுத்துள்ளது.

அவர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தவறான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் சில நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து அடுத்த ஜனாதிபதியை சுயமாக தெரிவு செய்வதற்கான உரிமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், சமூக ஊடகங்களில் இதுபோன்ற தவறான பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.