பெங்களூர்: இந்தியாவிலேயே இப்படியொரு வங்கி எங்கேயும் இல்லை..!

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது, குறிப்பாகப் பல ஆயிரம் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் போதுமான நிதியுதவி இல்லாத காரணத்தால் சுமார் 60000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து நிதியைத் திரட்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் உலக நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியதும், அதன் மூலம் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஸ்டார்ட்அப் முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் VC, PE முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் பின்வாங்கியது.

இந்த இடைவெளியை நீண்ட கால அடிப்படையில் சமாளிக்கக் கர்நாடக அரசு முக்கியமான திட்டத்தையும், கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது.

பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம்.. EPFO முக்கிய முடிவு..!

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நகரம் என்றால் அது பெங்களூர் தான், இதே பெங்களூரில் தற்போது முதலீடுகள் இல்லாமல் பல ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த இடைவெளியை உடைக்கக் கர்நாடக அரசு முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

கர்நாடக டிஜிட்டல் எகனாமி மிஷன்

கர்நாடக டிஜிட்டல் எகனாமி மிஷன்

கர்நாடக டிஜிட்டல் எகனாமி மிஷன் (KDEM) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதல் படியாக SBI வங்கி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக இந்தியாவிலேயே முதல் பிரத்தியேக கிளையை (SBI Startup Hub கிளை) பெங்களூரின் முக்கியமான பகுதியான கோரமங்களா-வில் திறக்க உதவுகிறது. ஆகஸ்ட் மாதம் கிளை திறக்கப்படும்.

SBI Startup Hub கிளை
 

SBI Startup Hub கிளை

இந்த SBI Startup Hub கிளை மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வங்கி வசதிகள், நிதியுதவி, கடன் வசதிகளை அணுக உதவும். ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி பிணையில்லா நிதி உதவி வழங்கப்படும்.

கர்நாடக அரசு

கர்நாடக அரசு

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்தும் என்று ஐடி/பிடி அமைச்சர் டாக்டர் சி என் அஷ்வத் நாராயண் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் மைசூரு, மங்களூரு மற்றும் ஹூப்பள்ளி-தர்வாட் கிளஸ்டர்களில் இதேபோன்ற கிளைகளை எஸ்பிஐ தொடங்கும் என்று அவர் அறிவித்தார்.

புதிய Fintech Innovation Hub

புதிய Fintech Innovation Hub

கர்நாடக டிஜிட்டல் எகனாமி மிஷன் (KDEM) ஆனது Fintech துறையைக் குறிவைத்து மங்களூருவில் Fintech Innovation Hub ஐ நிறுவும் மற்றும் SBI இந்தப் பின்டெக் இன்னோவேஷன் ஹைப்-க்கு உதவி வழங்குவதற்கும் பங்குதாரர் நிறுவனங்களில் ஒன்றாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படியும் ஒரு நிறுவனமா.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI and Karnataka Govt Signs MoU to open India’s first branch for startups

SBI and Karnataka Govt Signs MoU to open India’s first branch for startups பெங்களூர்: இந்தியாவிலேயே இப்படியொரு வங்கி எங்கேயும் இல்லை..!

Story first published: Monday, July 18, 2022, 21:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.