பிரேடி,
அயர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டியானது அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் தவித்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ரெபேக்கா ஸ்டோகல் 22 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது. பெத் மூனி அதிகபட்சமாக 43 ரன்களும், கேப்டன் மெக் லானிங் 39 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.