போராட்டத்தின் போது திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் கைது

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்துஇ ஆர்ப்பாட்டக்காரர்களால் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (17) ஒபேசேகரபுர நாணயக்கார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பொரளை கோதமி வீதியில் உள்ள அவரது தற்காலிக இல்லத்தில் இருந்து 50 கண்ணீர் புகை குண்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் பொலன்னறுவை காஷ்யபபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்  என தெரியவந்துள்ளது.

அவர் இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.