மகனை வாரிசு நடிகராக தயார் செய்யும் விஜய் சேதுபதி
முன்னணி நடிகர்கள் தங்களின் மகனை நடிப்பு வாரிசாக கொண்டு வந்து நிறுத்துவது ஒன்றும் புதிதல்ல, சில வாரிசுகள் வெற்றி பெறுகிறார்கள். பல வாரிசுகள் ஒரு சில படங்களோடு காணாமல் போய்விடுகிறார்கள்.
இந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் விஜய் சேதுபதி. சிந்துபாத் படத்தில் மகன் சூர்யாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இதில் அவர் மலைவாழ் மக்களுக்காக போராடும் போராளியாக நடிக்கிறார்.
அந்த மலைகிராமத்து விடலைச் சிறுவனாக விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்திருக்கிறார். வெற்றி மாறன் இயக்கத்தில் மகனை ஹீரோவாக களம் இறக்க விஜய் சேதுபதி முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான பயிற்சி களமாக இந்த படத்தை அவர் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.