மூக்கை அழகுபடுத்த பணம் தேவை., பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை விற்ற ரஷ்ய பெண்!


ரஷ்யாவில் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அழகுபடுத்த (Nose Job) பணம் தேவைப்பட்டதால், பெண் ஒருவர் பிறந்து 5 நாட்களே ஆன தனது குழந்தையை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தையை 3,581 அமெரிக்க டொலருக்கு விற்ற ரஷ்ய பெண் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

33 வயதான அப்பெண் (பெயர் வெளியிடப்படவில்லை) ஏப்ரல் 25 அன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு உள்ளூர் தம்பதிகளுக்கு குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அப்பெண் மனித கடத்தல் சந்தேகத்தின் பேரில் மே மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

மூக்கை அழகுபடுத்த பணம் தேவை., பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை விற்ற ரஷ்ய பெண்! | Russian Mother Sold5 Day Old Baby Arrested

மாணவி ஸ்ரீமதி மரணம்: தன்னை அறியாமல் கண்கலங்கிய சிறுமி; வைரலாகும் தாய்-மகள் விழிப்புணரவு வீடியோ.. 

தெற்கு நகரமான காஸ்பிஸ்கில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அவர் உள்ளூர்வாசி ஒருவரைச் சந்தித்து, தனது மகனை 200,000 ரூபிள்களுக்கு கொடுக்க ஒப்புக்கொண்டார்.

அவர் குழந்தையை ஒப்படைத்த நாளில், அப்பெண் குழந்தையை ஒப்படைப்பவரிடம் “குழந்தைக்கான உரிமைகளுக்கான விலக்கு” வழங்கினார். பதிலுக்கு, மேலும் 21,000 ரூபிள் சிறிய தொகையைப் பெற்றுள்ளார். சில வாரங்களுக்குப் பிறகு, மே 26 அன்று, அந்தப் பெண் மீதமுள்ள பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சிறிது நேரம் கழித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்த ஜோடி மற்றும் குழந்தையின் தாய் என மூவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சிசிடிவியில் சிக்கிய மர்மமான வெளிறிய உருவம்! அமானுஷ்யம் என வைரலாகும் வீடியோ 

மூக்கை அழகுபடுத்த பணம் தேவை., பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை விற்ற ரஷ்ய பெண்! | Russian Mother Sold5 Day Old Baby Arrested

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 33 வயதான பெண் குழந்தையையும் அவரது பிறப்புச் சான்றிதழையும் தங்களுக்கு வழங்கியதாக புதிய பெற்றோர் பொலிஸில் தெரிவித்தனர். தம்பதியினர் குழந்தைக்கு நேரடியாக பணம் கொடுக்க மறுத்தனர்.

“சிறப்பாக சுவாசிப்பதற்காக” மூக்கை சரிசெய்வதற்கான செலவுக்காக 3,200 டொலரை மட்டுமே அப்பெண் கேட்டதாக அவர்கள் தெரிவித்தனர், அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், குழந்தையின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.