ஆட்டநாயகன் விருது பெற்றபோது ரிஷப் பண்ட் மது போத்தலை வர்ணனையாளர் ரவிசாஸ்திரி கையில் கொடுத்து விட்டு ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசி மிரட்டினார்.
113 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் விளாசிய பண்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
விருதை பெற்ற பண்ட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியிடம் வந்தார். அப்போது ரவி சாஸ்திரி நேரலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
Pant offering his champagne to Ravi Shastri#INDvENG #OldTrafford #Pant #TeamIndia pic.twitter.com/n9HguNNuID
— Tejesh R. Salian (@tejrsalian) July 17, 2022
பண்ட் அவரை அழைத்து, தான் வைத்திருந்த மது போத்தலை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடி சென்றார்.
இதனால் ரவி சாஸ்திரி சற்று திகைத்து போனார்.
பண்ட்டின் குறும்புத்தனத்தை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.