ஜூலை 26ஆம் தேதி நடக்க இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4வதாக அதானி குழுமம் விண்ணப்பித்து உள்ளது.
இதனால் 5ஜி அலைக்கற்றைக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று டெலிகாம் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல லட்சம் பேரின் எதிர்பார்ப்பு சுக்குநூறாய் உடைந்தது.
தொலைத்தொடர்புத் துறை இன்று 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெறும் நிறுவனங்களின் தீவிர பண வைப்பு (EMDs) தொகை விபரங்களை வெளியிட்டுள்ளது.
கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஜாக்பாட்..!
டெலிகாம் துறை
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், பார்தி ஏர்டெல், அதானி டேட்டா நெட்வொர்க்குஸ் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) திங்கட்கிழமை தொலைத்தொடர்புத் துறை (DoT) வெளியிட்ட தரவுகளின்படி, முறையே ரூ.14,000 கோடி, ரூ.5,500 கோடி, ரூ.100 கோடி மற்றும் ரூ.2,200 கோடிகள் தீவிர பண வைப்புகளில் (EMDs) வைத்துள்ளனர்.
5ஜி அலைக்கற்றை
ஜூலை 26 முதல் வரவிருக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனையில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் DoTக்கு தாக்கல் செய்த விண்ணப்பங்களின் ஒரு பகுதியாக EMDகள் உள்ளன. EMD குவாண்டம் என்பது ஒரு நிறுவனத்தின் ஏல உத்தி மற்றும் ஸ்பெக்ட்ரம் வாங்கும் திறனைக் குறிக்கிறது.
தீவிர பண வைப்பு நிதி
இந்தத் தீவிர பண வைப்பு நிதிகள் மூலம் ஸ்பெக்ட்ரம் ஏல விண்ணப்பதாரருக்குத் தகுதி புள்ளிகளை வழங்குகிறது தொலைத்தொடர்புத் துறை. ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் 5G விற்பனையில் அந்தந்த EMDகளை எட்டு முதல் ஒன்பது மடங்கு வரை மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை இலக்காகக் கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தொலைத்தொடர்புத் துறை
தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் உள்ள EMD வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், அதிக டெபாசிட்களைக் கொண்ட ஜியோ 159830 தகுதி புள்ளிகளைச் சேகரித்துள்ளது, ஏர்டெல் 66330 புள்ளிகளைக் குவித்துள்ளது. Vi 29370 புள்ளிகளையும், புதிதாக நுழைந்த அதானி 1650 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
இலங்கை-யை காப்பாற்றும் இந்திய ரூபாய்.. RBI மாஸ்டர் பிளான்..! பலே சபாஷ்..!
5G auction: Jio puts Rs 14,000 crore as EDM, but Adani puts just Rs 100 crore
5G auction: Jio puts Rs 14,000 crore as EDM, but Adani puts just Rs 100 crore வெறும் 100 கோடியா.. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம் கொடுத்த ஏமாற்றம்..!