ஹீரோவானார் ரக்ஷன்
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன். குறிப்பாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு துல்கர் சல்மானுடன் இணைந்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்தார். இதையடுத்து புதிய படம் மூலம் ஹீரோவாக ரக்ஷன் அறிமுகமாகவுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை யோகேந்திரன் என்பவர் இயக்கவுள்ளார்.
கதாநாயகியாக விஷாகா திமான் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தீனா, பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் நடிக்கின்றனர். காதல் மற்றும் காமெடியை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.