சேலம் மேச்சேரியில் உள்ள தமிழக அரசின் மேல்நிலைப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
கோகிலவாணி என்ற அந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
படுகாயம் அடைந்த மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக, மேச்சேரி காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.