Elon Musk: ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து; பராக் அக்ரவாலுக்கு SMS அனுப்பிய எலான் மஸ்க்!

Elon Musk texted Parag Agrawal: ட்விட்டர் ஒப்பந்தத்தின் சூடு இன்னும் தணிந்த பாடில்லை. அதற்கு முன்னதாக புதுபுது தகவல்கள் இணையத்தை சூழ்ந்துகொள்கிறது. வேறு யாரையும் குறித்தல்ல… எல்லாம் எலான் மஸ்க் குறித்த செய்திகள் தான் இணையத்தில் பரவிக் கிடக்கிறது.

எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகு, அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தருவாயில், ட்விட்டர் தலைமை செயல் அலுவலருக்கு எலான் மஸ்க் அனுப்பிய குறுஞ்செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக செய்தி:
James Webb Space Telescope: பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி – வியாழனின் படங்களை வெளியிட்ட நாசா!

அதாவது, எலான் மஸ்கிடம் ட்விட்டரை வாங்க நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைத்தது என்று வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். இதற்கு பிரச்சினையை தீர்க வழிசெய்யாமல், அதனை இன்னும் பெரிதாக வழக்கறிஞர்கள் முயற்சிப்பதாக மஸ்க் ட்விட்டர் நிர்வாகிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

எலான் மஸ்க் SMS சர்ச்சை

தொடர்ந்து இந்த தகவல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மஸ்க் ஜூன் 28 அன்று, “வழக்கறிஞர்கள் உரையாடலைக் கொண்டு பிரச்சினைகளை பெரிதாக்க முயற்சிக்கின்றனர்” என ட்விட்டர் தலைமை செயல் அலுவலர் பராக் அகர்வால், CFO நெட் செகல் ஆகியோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

சமீபத்தில், மஸ்கின் வழக்கறிஞர்கள், ட்விட்டர் அலுவலர்கள் நியாயமற்ற முறையில் விசாரணையை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணையை தொடங்குமாறு ட்விட்டர் நிர்வாகம் நீதிமன்றத்தை கோரியுள்ளது.

இருப்பினும், விசாரணையைத் தொடங்க 2023ஆம் ஆண்டின் தொடக்கம் வரை கால அவகாசம் தேவைப்படும் என்று மஸ்க்கின் சட்டக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lockdown Mode: பூட்டை உடைத்தால் ரூ.16 கோடியாம்; ஆப்பிள் அறிவித்த அல்டிமேட் ஆஃபர்!

ட்விட்டர் ஒப்பந்தம்

டெஸ்லா நிறுவனரும், உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டார். கடந்த வாரம், தளத்தில் உள்ள பாட்களின் எண்ணிக்கை அல்லது ஸ்பேம் கணக்குகள் குறித்த விவரங்கள் வழங்கப்படாததால், ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலதிக செய்தி:
Oppo Reno 8: ஜூலை 18 ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அறிமுகம்? விலை, அம்சங்கள் என்ன?

எலான் மஸ்க் முன்னதாக பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ட்விட்டருக்கான எனது சலுகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. ட்விட்டரின் தலைமை செயல் அலுவலர், ஒப்பந்தத்தில் கூறியபடி, பாட்கள் 5% விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார். மேலும் அது நிரூபிக்கப்படும் வரை ஒப்பந்தம் தொடராது.” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.