–
இந்த மாதம் தென்மேற்கு பருவமழை ஏமாற்றவில்லை. ஆகையால் நடப்பு ஜூன் முதல் ஜூலை மாதங்களில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி நிலவரப்படி 128.53 நெல் பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 17.4 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு 155.53 ஹெக்டேர் ஆக இருந்தது.
அரிசி கையிருப்பு 47.2 மில்லியன் டன் ஆக உள்ளது. இது கடந்த காலங்களை காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாகும். ஆக அரிசி கையிருப்பு குறித்து கவலைக்கொள்ள தேவையில்லை.
எனினும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசியை காட்டிலும் கோதுமை ஒரு கடினமான பயிர். இது இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த பயிரில் அரிசியின் பங்கு அதிகமாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய விவசாய பயிராகும். அதாவது மொத்த தானிய உற்பத்தியில் அரிசியின் பங்கு 40 சதவீதம் ஆக உள்ளது. இதனால் அரிசி ஏற்றுமதியில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின் மார்ச்க்குள் 9.66 பில்லியன் டாலர் மதிப்பிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒட்டுமொத்த உலகில் அரிசி பங்கீட்டில் இந்தியாவின் அளவு 40 சதவீதம் ஆக உள்ளது.
நெல் விதைப்பு குறைந்தது ஏன்?
பொதுவாக நெல் பயிரை முதலில் நர்சரிகளில் விதைத்து அந்த நாற்றுகளை பிடுங்கி வயலில் நட வேண்டும். அல்லது வயலில் நாற்று நடவேண்டும். அல்லது வயலில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.
இதற்கு போதிய நீர் வசதி வேண்டும். கடந்தாண்டு பருவமழை பொய்த்த நிலையில் இது சாத்தியமில்லாமல் ஆனது. ஆனால் தற்போது வழக்கத்தை விட 353.7 மீட்டர் மழை பெய்துள்ளது. இது சாதாரண வழக்கத்தை விட 12.7 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த மழை பொழிவை விட 55.5 சதவீதம் குறைவாகவும், கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் முறையே 70 சதவீதம், 45.8 சதவீதம் மற்றும் 48.9 சதவீதம் என குறைந்துள்ளது.
போதிய மழைப் பொழிவு இல்லாததால் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 15ஆம் தேதிவரை 26.98 லட்சம் ஹெக்டேர் ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே சீசனில் இது 35.29 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது.
இதேபோல் மேற்கு வங்கம் 4.68 லட்சம் ஹெக்டேரில் இருந்து 3.94 லட்சம் ஹெக்டேர் ஆகவும், ஜார்க்கண்ட் 2.93 லட்சம் ஹெக்டேரில் இருந்து 1.02 லட்சம் ஹெக்டேர்ஆகவும் குறைந்துள்ளது.
இதேநிலைதான், ஒடிசா, சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது.
நாற்று எப்படி நட முடியும்?
உத்தரப் பிரதேசம் (மேற்கு-கிழக்கு) இதுவரை முறையே 90 மி.மீ மற்றும் 79.6 மி.மீட்டர் மழை பொழிவு கிடைத்துள்ளது.
இதேபோல் உத்தரப் பிரதேசத்தின் அருகில் உள்ள பிகார் மாநில மாவட்டங்களிலும் மழை பொழிவு எதிர்பார்த்தப்படி இல்லை. இதனால், நாற்றுகள் 35 நாள்களுக்கு மேல் ஆகியும் வயலுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதனை கவலையாக தெரிவித்த விவசாயி, இந்தச் சூழலில் போதிய நீர் இல்லாதபோது எப்படி நாற்று நடமுடியும் என விவசாயி ஒருவர் கேள்வியெழுப்பினார்.
ஆனால் இதற்கு மாறாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் இரு முறை சாகுபடி செய்து அருவடை செய்கின்றனர்.
எனினும் நாற்றாங்காலில் இருந்து வயலில் நாற்றுகள் பிடுங்கி நடும்போது மழை பெய்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதற்கு காரணம் நாற்றும் பழுது இல்லாமல் வளரும், மேலும் அருவடையும் எதிர்பார்ப்பை விட 15-20 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்பதே ஆகும்.
அரிசிக்கு நெருக்கடி?
ஆகவே அரிசிக்கு நெருக்கடி இப்போது இல்லை. பருவ மழை எதிர்பார்த்தபடி பரவலாக நாடு முழுக்க பெய்துவருகிறது. இந்த பருவமழை வரும் நாள்களில் வடக்கு நோக்கி செல்லும். ஆகவே இனிவரும் நாள்களில் கங்கை வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரணத்தை வழங்கும்.
மேலும் நெல் சாகுபடியானது விந்திய மலைகளுக்கு வடக்கே உள்ள சில மாநிலங்களில் விளையும் கோதுமை போன்று இல்லை. பரவலாக பயிரிடப்படுகிறது.
மேலும் அரிசி குளிர் மற்றும் கோடை காலத்திலும் விளையும் பயிராக உள்ளது. இதனால் ஒரு பகுதியில் ஏற்படும் இழப்பை மறுபயிரிடலில் ஈடுகட்ட முடியும். மேலும் வணிகர்களும் அரிசியை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே தற்போதைய கையிருப்புடன் சமாளிக்க முடியும்.