Jio Fiber Plans: நாட்டின் முன்னணி ஃபைபர் இணைய சேவை வழங்குநராக ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் உள்ளது. தற்போது இணையத்தின் தேவை அனைவருக்கும் இருக்கிறது. தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் பயனர்களுக்கு திட்டங்களுடன் சலுகைகளை அறிவித்து வருகிறது.
இணைய வசதி இல்லை என்றால் தானே தொலைந்துவிட்டதாக பலர் எண்ணுகின்றனர். ஏனென்றால், இணையத்தில் தான் நாட்டிலுள்ள பெரும்பாலான வேலைகள் நடக்கிறது. அதுவும், கொரோனா தொற்று உச்சம் அடைந்தபோது, வீட்டில் இருந்து பெரும்பாலானோர் பணியாற்றினர்.
SmartWatch: அதிசய பொருள் கண்டுபிடிப்பு – பேட்டரி இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்!
இப்போதும் சிலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மலிவு விலையில் அதிவேக இணையம் தேவைப்பட்டது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் கொண்டுவந்தது தான் 30mbps பட்ஜெட் திட்டம்.
இதில் அதிவேக இணைய சேவை மட்டுமில்லாமல், வேலைப்பழுவில் இருந்து வெளியே வரும் பயனர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக சில பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரபல ஓடிடி தளங்களின் அணுகலும் இந்த மலிவு விலை பட்ஜெட் திட்டத்துடன் வருகிறது.
ஜியோ ஃபைபர் 30mbps பிராட்பேண்ட் திட்டம் – Jio Fiber 30 mbps plan
JioFiber தனது இணைய சேவைகளை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சந்தா முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. நீங்கள் பிராட்பேண்ட் திட்டத்தில் குறைந்த செலவில் OTT அணுகலைப் பெற விரும்புபவராக இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முதலாவது, ரூ.1797 ஜியோ ஆஃபர் திட்டம் இருக்கிறது. இது வழக்கமான 30 Mbps போஸ்ட்பெய்டு பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டம் மூன்று மாதத்திற்கு செல்லுபடியாகும். இதனுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ZEE5, Voot Select, Voot Kids, SunNXT, Hoichoi, Discovery+ உள்பட 14 OTT பயன்பாடுகளுக்கான சந்தா கிடைக்கும்.
பயனர்கள் 550க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை ஜியோ செயலி மூலமாக பெற முடியும். இந்த திட்டத்தில் 3.3TB டேட்டா மாத வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Lockdown Mode: பூட்டை உடைத்தால் ரூ.16 கோடியாம்; ஆப்பிள் அறிவித்த அல்டிமேட் ஆஃபர்!
மற்றுமொரு ஜியோ ஃபைபர் 30mbps திட்டம்
ஜியோ ஃபைபர் 30mbps வேகத்தில் வேறொரு திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய ரூ.1497 செலவிட வேண்டும். மூன்று மாதத்திற்கு இத்திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 6 OTT செயலிகளின் அணுகல் கிடைக்கும்.
அதுமட்டும் இல்லாமல், 400-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை நேரலையில் காணலாம். இதிலும் 3.3TB டேட்டா மாத வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேப்டாப் வாங்கினால் ஓராண்டு இலவச டேட்டா – Jio உடன் கைகோர்த்த HP நிறுவனம்!
ஜியோ ஃபைபரின் மலிவு விலை ரூ.1197 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஒரு மலிவு விலை அடிப்படை திட்டத்தையும் 30mbps வேகத்துடன் கொண்டுள்ளது. பிற திட்டங்களைப் போலவே இதிலும் டேட்டா நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள், லைவ் டிவிக்களுக்கான அணுகல் கிடைக்காது.