Myths About Diabetes: இதைச் செய்தால் 2 மாதத்தில் சுகர் பிரச்னை ஒழியுமா?

சர்க்கரை நோய் மற்றும் அது தொடர்புடைய கட்டுக்கதைகளுக்கு நிபுணர்களின் விளக்கம் குறித்து இங்கு காண்போம்.

சர்க்கரை நோய்/ நீரிழிவு நோய் இந்த காலகட்டத்தில் காய்ச்சல், சளி போன்று சாதாரண நோயாக மாறிவிட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருந்து உட்கொள்ளப்படுகிறது. ஆனாலும், நோய் குணமடைய வேண்டும் என்றால் இதை சாப்பிட வேண்டும், இதை செய்ய வேண்டும் எனப் பல கூறப்படுகிறது. உண்மையில் இதைச் செய்தால் நோய் குணமடைந்து விடுமா?. டாக்டர் அக்ஷத் சாதா கூறியது குறித்து இங்கு காண்போம்.

கட்டுக்கதை: 6-8 வாரங்களில் நோயை குணப்படுத்தலாம்

மருத்துவர்கள் கூறுவது: 6-8 வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. இதில் டயட் இருப்பதன் மூலம் உடல் எடை குறைவதுடன் (மாதம் 4-5 கிலோ) இரத்த பரிசோதனை முடிவுகளும் சிறப்பாக இருப்பதைக் காட்டலாம். ஆனால், இது பிற்காலத்தில், நாளடைவில் வேறு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

விளம்பரம் செய்யப்பட்ட திட்டத்தில் சேரும் போது, சிலர் மருந்துகளை நிறுத்திவிடுகிறார்கள். அப்போது பிரச்சனை தீர்ந்தது போல் இருக்கும், ஆனால் அந்த பயிற்சி முடிந்த நிலையில், பலருக்கு சர்க்கரை அதிகரிக்கத் தொடங்குகிறது. மீண்டும் மருத்துவரை நாடுகின்றனர்.

கட்டுக்கதை: கார்போஹைட்ரேட், பழங்கள், இனிப்புகளை தவிர்க்க வேண்டும்

மருத்துவர்கள் கூறுவது: கேக்குகள், பேஸ்ட்ரிகள், சோடாக்கள் மற்றும் கவரில் அடைக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனையின் முக்கிய காரணமாக உள்ளன. தானியங்கள் மற்றும் பழங்கள் சர்க்கரையை அதிகரிக்கலாம் ஆனால் அது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். சில நேரங்களில் நோயை கட்டுப்படுத்த மொத்தமாக உணவை குறைத்து சாப்பிடுவது உண்டு. அவ்வாறு இல்லாமல் சீரான உணவைச் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஆரோக்கியமும் மேம்படும்.

கட்டுக்கதை: உண்ணாமல் விரதம் இருத்தல் (Fasting)

மருத்துவர்கள் கூறுவது: விரதம் இருக்கும் போது ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுவீர்கள். உண்ணாமல் இருப்பது என்பது பழமையான பழக்கம். ஆனால் இதை மேம்போக்காக செய்யாமல், ‘சரியான வழியில்’ செய்தால் நன்மைகள் கிடைக்கும். எனவே, இதைப்பற்றி அறிந்து செய்வது நல்லது. இருப்பினும் இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். தொடர்ந்து விரதம் இருக்கும் போது ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உண்ணாமல் விரதம் இருத்தல், சரியான வழிகாட்டுதலின் கீழ் செய்தால் நன்மை தரும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்,

கட்டுக்கதை: வழி வழியாக குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால், அதிலிருந்து விடுபட முடியாது.

வழி வழியாக குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால், பெற்றோருக்கு நோய் இருந்தால், குடும்பத்தில் மற்றொருவர் நோய்க்கு ஆளாவதில் பெரும் பங்கு உள்ளது. ஆனால் இது மட்டும் நோய்க்கான காரணமாக கூற முடியாது. வாழ்க்கை முறை, அன்றாடப் பழக்கவழக்கங்கள், உணவு முறைகளும் காரணமாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாடோடும், கவனத்தோடும் இருந்தால், நோயைக் கட்டுப்படுத்துவதும், மருந்துகள் குறைக்கப்படுவதும் எளிதில் செய்ய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கட்டுக்கதை: மருந்து, இன்சுலினை எடுக்கத் தொடங்கினால், அதை நிறுத்த முடியாது

மருந்து, இன்சுலின் எடுத்துக் கொள்வது பீட்டா-செல் செயல்பாட்டை (இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள்) பாதுகாக்க உதவும் மேலும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்திருந்தால், மருந்து உட்கொள்வதை விரைவில் நிறுத்த முடியும். நன்றாக உணவு உண்பது, உடற்பயிற்சி, தூக்கம், மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகித்தல் போன்ற அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாமல் தவிர்த்தால் மருந்துகள் உட்கொள்வது அதிகரிக்கலாம்.

மருத்துவர்கள், மருத்துவத்தை சந்தேகிப்பதை தவிர்த்து விட்டு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்தி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படுத்ததப்பட்டு, குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.