நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்யிடுகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களும், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலோ, தலைமைச் செயலக வளாகத்திலோ மாநில எம்எல்ஏக்களும் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம், பாஜக வேட்பாளரான திரெளபதி முர்மு தமத வாக்கை செலுத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தும், பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது தமது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ள மொகிம், சொந்த மண்ணுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று மனதில் மேலோங்கிய எண்ணத்தால் திரௌபதி முர்மு வாக்களித்துள்ளேன் என்று அவர் ஓபனாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாஜக வேட்பாளரான திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.