Presidential Polls 2022 Live Updates: நேருக்கு நேர் மோதும் திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா ​​

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று (ஜூலை: 18) நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு புது டெல்லியிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத் தலைநகரங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் தகுதி கிடையாது.

அதன்படி, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

எம்பி, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

எம்எல்ஏக்களை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 175 ஆக உள்ளது. எம்பி, எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,86,431 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்படும். இதற்காக புது டெல்லியில் இருந்து வாக்குப்பெட்டிகள், மாநிலத் தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டன. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளும், இதர தேர்தல் உபகரணங்களும் டெல்லிக்கு விமானத்தில்  திருப்பி அனுப்பப்படும்.

வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைய உள்ளது.

பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி, பிஎஸ்பி, அதிமுக, டிடிபி, ஜேடி(எஸ்), சிரோமணி அகாலி தளம், சிவசேனா மற்றும் ஜேஎம்எம் ஆகியோரின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 60 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட தெளிவான முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
08:30 (IST) 18 Jul 2022
பழங்குடி சமூகம் உற்சாகமாக உள்ளது.. முர்மு

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை, பழங்குடி சமூகத்தை, குறிப்பாக அதன் பெண்களை ” உற்சாகமாக மாற்றிய ஒரு வரலாற்று தருணம் என்று விவரித்தார்,

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.