தேசத்தின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்யிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களும், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலோ, தலைமைச் செயலக வளாகத்திலோ வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் மாநில எம்எல்ஏக்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் என நாடு முழுவதும் மொத்தம் 4,796 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தேர்த்ல ஆணையம் அறிவித்திருந்தது. இவர்களில் 99% எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளதாக ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிலும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணி்ப்பூர், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு ஆகிய 12 மாநிவங்களில் எம்எல்ஏக்கள் 100% பேர் இன்றைய தேர்தலில் பங்கேற்றனர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
எம்பி, எம்எல்ஏக்கள் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.