தமிழில் உறுதி ஏற்ற ப.சிதம்பரம்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அப்போது, ‘மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் என்னும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய இறையாண்மையையும் உறுதிப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடைமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூர்கிறேன்” என்றார்.
டெல்லி செல்கிறார் துரைமுருகன்
மேகதாது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு கொண்டாட்டம்- மு.க. ஸ்டாலின் காணொலி உரை
தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை18) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் அரிசி, தயிர் விலை உயரும் அபாயம்
பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், புதிய விலை இன்று முதல் அமலுக்குவருகிறது.
பள்ளி தாளாளர் உள்பட 7 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், செயலாளர் உள்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மறுபிரேத பரிசோதனையின்போது பெற்றோர் உடனிருக்கலாம் என்றும் பரிசோதனை முடிந்த பின்னர் உடலை பெறவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு
ஜெக்தீப் தன்கருக்கு ஓ.பி.எஸ் ஆதரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தன்கருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் பயணம் செய்த 12 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறையில் பள்ளிக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முகநூலில் அனுமதியின்றி பேரணிக்கு அழைப்பு விடுத்த 3 அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்பூம் படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் அவமதிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் சக்கர நாற்காலியில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார்.
கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் தன்னெழுச்சி போராட்டம் என நாட்டை விட்டு மனைவியுடன் வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருக்கிறார். மேலும் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே உள்ளார்.
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவங்கள் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்ந்து, ‘கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவ-மாணவியையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் நினைத்து பயிற்றுவிக்க வேண்டும்’ எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் இறங்குமுகமாக இருந்த இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாள் வர்த்தகமான வெள்ளிக்கிழமை உயர்வை சந்தித்தன.
இந்த நிலையில் இன்றைய வணிகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 400 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 16,150 ஆக காணப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4,647 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரு.37,176ஆக விற்பனையாகிவருகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.61.30 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.61 ஆயிரத்துக்கு 300 ஆக உள்ளது.
கள்ளக்குறிச்சி கலவர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மீட்டு போலீசார் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.