உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஓப்போ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப் புது மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஓப்போ நிறுவனம் தனது புதிய தயாரிப்பு குறித்த நேரடி ஒளிபரப்பை யூட்யூபில் ஒளிபரப்பி கொண்டிருந்தபோது திடீரென அந்த சேனலை யூடியூப் சஸ்பண்ட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்!
ஓப்போ இந்தியா நிறுவனத்தின் யூடியூப் சேனல் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஓப்போ ஸ்மார்ட்போன்கள்
ஒரு சில கால இடைவெளிக்கு ஏற்ப ஒப்போ நிறுவனம் புது புது மாடல்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது என்பதும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூபில் விளம்பரம்
அந்த வகையில் சமீபத்தில் ஓப்போ இந்தியா புதிய தயாரிப்புகளான Reno 8 Pro மற்றும் Reno 8, OPPO Pad Air டேப்லெட் மற்றும் TWS இயர்பட்களின் வீடியோவை யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியது.
சஸ்பெண்ட்
இந்த சேனலில் வந்த வீடியோவை ஓப்போ வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தபோது திடீரென இந்த சேனல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த தகவலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விதிமீறல்
இதுகுறித்து யூடியூப் நிர்வாகம் விளக்கம் அளித்தபோது ஓப்போ நிறுவனம் தனது சேவை விதிமுறைகளை மீறியதாகவும் அதன் காரணமாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அதிருப்தி
இதுகுறித்து ஓப்போ நிறுவனம் இன்னும் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும் நேற்று ஓப்போ இந்தியா தனது யூடியூப் சேனல் நிறுத்தப்பட்டதை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கின்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் உட்பட தனது தயாரிப்புகளின் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சேனல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளதுதாக கூறப்படுகிறது.
ஆப்பிளுடன் ஒப்பீடு
ஒப்போ இந்தியா யூட்யூப் விதிமுறைகளை கடைபிடிக்க வில்லை என்றும் அதனால்தான் சேனல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக யூடியூப் கூறினாலும் ஓப்போ இந்தியா தனது விளம்பரத்தில் ஆப்பிள் ஐபோன் உடன் தனது புதிய தயாரிப்புகளை ஒப்பிட்டு கூறியதாகவும் அதற்கு பிறகு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி மதிப்பிலான சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக, சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்வுகள் உட்பட, தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஓப்போ இந்தியா கூறியுள்ளது.
Why YouTube suspends OPPO India channel during livestream of launch event
Why YouTube suspends OPPO India channel during during livestream of launch event | ஆப்பிளுக்கு இணையானதா ஓப்போ ஸ்மார்ட்போன்கள்: யூடியூப் எடுத்த அதிரடி நடவடிக்கை!