வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கை நிலவரம் குறித்து டில்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில், இலங்கை சூழல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது.
அங்கு நிலவும் சூழல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் விளக்கமளித்தனர்.
காங்கிரஸ் சார்பில் சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர், தேசியவாத காங்கிரசின் சரத்பவார், திமுக.,வின் டிஆர்பாலு , எம்எம் அப்துல்லா, அதிமுக.,வின் தம்பிதுரை, மதிமுக பொது செயலாளர் வைகோ, திரிணமுல் காங்கிரசின் சவுகதா ராய், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், டிஆர்எஸ் கட்சியின் கேசவராவ், பகுஜன் சமாஜ் கட்சியின் ரித்தேஷ் பாண்டே, ஓய்எஸ்ஆர் காங்கிரசின் விஜய்சாய் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசும்போது, இலங்கையில், முன்எப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவுகிறது. நமது அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதன் பின்விளைவுகள் குறித்தும் கவலைப்படுகிறோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலில், தவறான ஒப்பிடுகளுடன் பார்த்த மக்கள், இந்தியாவிலும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்படுமா என கேட்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement