ஈரான் மற்றும் துருக்கிய சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் தலைநகர் டெஹ்ரான் வந்தடைந்தார்.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்வதால், உலக நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதித்தன.
எனினும் தனது முடிவில் இருந்து பின் வாங்காத ரஷ்ய ஜனாதிபதி புடின் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் அவர் ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
தனது ஈரானிய மற்றும் துருக்கிய சகாக்களான இப்ராஹிம் ரைசி மற்றும் ரெசிப் தையிப் எர்டோகன் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த புடின் ஈரானுக்கு விரைந்தார்.
EPA
விமானம் மூலம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தானிய ஏற்றுமதி, சிரியா மற்றும் உக்ரைன் ஆகியவை டெஹ்ரானில் விவாதிக்கப்படும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன என்று துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் புடின் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.