சண்டிகர் : மத்திய அரசு வெளியிட்டுள்ள, கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில், சண்டிகர் பல்கலைக்கழகம், 29வது இடத்தைப் பிடித்துள்ளது.நாடு முழுதும் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை மதிப்பிடும் விதமாக, என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை, ஆண்டுதோறும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில், அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கான பிரிவில், சண்டிகர் பல்கலைக்கழகம் 29வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து, பல்கலை.,யின் வேந்தர் சத்னம் சிங் சாந்து கூறியதாவது:நாடு முழுதும் உள்ள கல்லுாரிகள் மற்றும் பல்கலை.,களின் தரவரிசையில், சண்டிகர் பல்கலை., 29வது இடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாபில் உள்ள பல்கலை.,களில் இரண்டாம் இடமும், தனியார் பல்கலை.,களின் வரிசையில் முதலிடமும் பிடித்துள்ளது. பொறியியல் படிப்பில் மாநில அளவில் இரண்டாவது இடமும், நிர்வாக படிப்புகளில் தேசிய அளவில் 40வது இடமும், கட்டிடக்கலையில் தேசிய அளவில் 19வது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement