சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் ஒற்றை மூங்கில் குச்சி மீது நின்றவாறு கையில் மற்றொரு மூங்கில் குச்சியுடன் ஆற்றை கடந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிறுவயதிலிருந்தே பாரம்பரிய தற்காப்புக்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட 42 வயதான பான் ஹைட்டாவோ என்ற அந்த கலைஞர் ஆற்றை மூங்கில் மூலம் கடக்கும் பயிற்சியை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜிலின் நகரத்தில் உள்ள சாங்குவா ஆற்றை அவர் 8 மீட்டர் நீளம், 15 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட மூங்கில் மீது நின்றவாறு கடந்தார்.