ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் புரட்சி செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனத்தின் வாகன தயாரிப்பு தொழிற்சாலை அதிக வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை செய்து வருகிறது.
இந்த சாதனையின் அடுத்தகட்டமாக ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் வாரத்தில் தங்கத்தின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்.. விலை என்னவாகுமோ?
ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள்
ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்தாலும் அந்த வாகனத்திற்கு உள்ள ஆர்வம் மக்களிடம் இன்னும் குறையவில்லை. ஏராளமான இருசக்கர வாகனங்களை வாங்கி வருகின்றனர் என்பதும் அடுத்த பத்தாண்டுகளில் டீசல் வாகனங்களே இல்லாத அளவுக்கு சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இயங்கும் அளவுக்கு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்
இந்த நிலையில் ஓலா நிறுவனம் புதியதாக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஸ்போர்ட்ஸ் கார்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் வீடியோ
இதுகுறித்து பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள டீசர் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெறும் மூன்று விநாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக இது ஒரு ஸ்போர்ட்ஸ் கார் ஆகத்தான் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர். மேலும் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் இந்த ஸ்போர்ட்ஸ் கார் தயாராகலாம் என்றும் அப்படி தயார் ஆனால் அது மேக் இன் தமிழ்நாடு தயாரிப்பு ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பாவிஷ் அகர்வால்
நாங்கள் இந்தியாவில் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம் என பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த காரில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏரோ டைனமிக் டிசைன்
ஸ்போர்ட்ஸ் கார் என்றாலே அதி வேகமாக செல்லவேண்டும் என்ற நிலையில் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு ஏரோ டைனமிக் டிசைனில் இந்த கார் உருவாக்கப்படும் என தெரிகிறது. மேலும் டிகோர், நெக்ஸான், எம்ஜி போன்ற எலெக்ட்ரிக் கார்கள் 300 கிலோ மீட்டர் வரை ஒரு சிங்கிள் சார்ஜில் செல்லும் தன்மை உடையது என்பதால் ஓலா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்கள் அதைவிட அதிகமாக கிலோமீட்டர் தரும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் வரை இந்த ஸ்போர்ட்ஸ் கார் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மணிக்கு 200 கிமீ
மேலும் ஸ்போர்ட்ஸ் கார் என்றாலே அதன் வேகம் தான் முக்கியம் என்பதால் கிளம்பிய 6 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தன்மை உடையதாக இருக்கும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை டாப் ஸ்பீடு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
தானாக பிரேக் பிடிப்பது
ஓலா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் வீடியோவில் காரின் வெளிப்பக்கம் மட்டுமே தற்போதைக்கு தெரிய வந்தாலும் உள்பக்கத்தை அந்த நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கிறது என்றே கூறவேண்டும். இருப்பினும் இது உள்பக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பாக தானாகவே லேன் மாறுவது, தானாக பிரேக் பிடிப்பது, தானாக பார்க்கிங் செய்து கொள்வது போன்ற அம்சங்கள் இதில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன விலை?
ஓலா ஸ்போர்ட்ஸ் காரின் விலையை பொருத்தவரை டாடா உள்பட பல நிறுவனங்கள் போட்டியாக இருப்பதால் 15 முதல் 18 லட்சத்திற்கு இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் விலை இருக்கலாம் என்று கூறப்படுவதால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ola CEO Bhavish Aggarwal Announces Plan to Sportiest Car In India
Ola CEO Bhavish Aggarwal Announces Plan to Sportiest Car In India | ஓலாவின் வேற லெவல் திட்டம்.. 15 லட்சத்தில் இப்படி ஒரு காரா?