சேலம் : கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்,முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.