வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் வள்ளிமலை வேல்முருகன். இவர், தேர்தல் சமயத்தில்தான் தி.மு.க-வில் ஐக்கியமானார். ‘அடிப்படை உறுப்பினராகக்கூட கட்சியில்லாத வேல்முருகன் எடுத்த உடனேயே தலைவரானது எப்படி!?’ என்பது தெரியாமல், இன்று வரை அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து, ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் வேலூர் மாவட்ட தி.மு.க-வினர். ‘இப்படியொருவர் கட்சியிலிருக்கிறாரா?’ என்பதையே உள்ளாட்சித் தேர்தலில் தான் ஆளுங்கட்சியினர் கண்டுபிடித்தனராம்.
கழுத்தில் கொத்துக் கொத்தாக கிலோ கணக்கில் தங்க செயின்களையும், கைகளில் உருளைப் போன்ற பிரேஸ்லெட்களையும் அணிந்துகொண்டிருப்பது தான் வேல்முருகனின் அடையாளம்.
தேர்தலுக்கு பிறகு பொது இடங்களுக்கு வரும் போதெல்லாம் தன் நகைகளை கழற்றி வைத்துவிட்டு முகத்தைக் காட்டத் தொடங்கினார். இந்த நிலையில், நேற்று அவருக்குப் பிறந்த நாள். வழக்கமாக அணியும் நகைகளை அணியவில்லை. அனைத்தும் புதிய நகைகளாக மினுமினுத்தன.
சுமார் 500 பவுன் நகைகளை அணிந்து கொண்டு, ஊர் ஊராக வலம் வந்து தனது ஆதரவாளர்களை திரட்டி கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்.