சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் எரிபொருள்

QR குறியீட்டு முறையின் கீழான தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) எரிபொருள் விநியோகத் திட்டம், எதிர்வரும் ஜூலை 25 முதல் நடைமுறைப்படுத்தப்பவுள்ளது.

இந்த திட்டத்தில் இன்று மாலை வரை 20 இலட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass)  தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் எரிபொருள் விநியோகப்படுவதாக- அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை,இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கப்பலில் உள்ள பெற்றோல் இன்று தரையிறக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து டீசலை இறக்கும் பணி நிறைவடைற்துள்ளதாக அமைச்சர் நேற்று டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். டீசல் ஏற்றிய மேலும் ஒரு கப்பல் தற்போது எரிபொருளை தரை இறக்குவதற்காக துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.