சென்னை: சென்னையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டியூஷன் ஆசிரியருக்கு உதவிய இளம்பெண்ணுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.