தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு கடந்த 2018-19 முதல் 2021-22 வரையில் ஆண்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதே 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM