நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம், வேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும்.
இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 2391 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 13.85% அதிகமாகும்.
இதே இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 2289 கோடி ரூபாயாகும். இது 2191.3 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. ஆக நிபுணர்களின் மதிப்பீட்டினையும் தாண்டி இந்த விகிதமானது அதிகரித்துள்ளது.
2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்?
வருவாய்
இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதம் 19.46% அதிகரித்து 14,331 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 13,438.5 கோடி ரூபாயாக எதிர்பார்க்கப்பட்டது. இதன் விற்பனை வளர்ச்சி விகிதமானது 6% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ஜினில் தாக்கம்
இதே வட்டி, வரிக்கு முந்தைய லாப விகிதமானது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 110 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பணவீக்கத்தின் மத்தியில் இதன் செலவினங்கள் அதிகரித்திருந்ததாகவும், இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்பத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த காலாண்டில் தாக்கம்
மேலும், மேற்கொண்டு சுற்றுசூழல் சவாலான நிலையே உள்ளது. பணவீக்கமும் கணிக்க முடியாததாகவே உள்ளது. இதன் காரணமாக நுகர்வு குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் தாக்கம் இருக்கலாம் என இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் மேக்தா தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜூன் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கவலை ஏன்?
தொடர்ந்து சந்தையில் போட்டி தன்மையும் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனம், தனது ஹெல்தியான வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. எனினும் அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. அதோடு கமாடிட்டிகளின் விலையும் உச்சத்திலேயே உள்ளது. ஆக இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
ஹோம் கேர் பிரிவில் நல்ல வளர்ச்சி
இந்த நிறுவனத்தின் ஹோம் கேர் பிரிவில் 30% வளர்ச்சி கண்டுள்ளதாகவும், பியூட்டி & பர்சனல் கேர் பிரிவில் 17% வளர்ச்சி கண்டுள்ளதாகவும், ஹேர் கேர் பிரிவில் இரு இலக்க வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல சோப்பு பிரிவிலும் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
HUL announced net profit rises 14% to Rs.2391 crore
HUL announced net profit rises 14% to Rs.2391 crore/தூள் கிளப்பிய ஹெச் யு எல்.. முதல் காலாண்டில் ரூ.2391 கோடி லாபம்.. !