நடப்பாண்டில் தமிழகத்தில்தான் அதிக கழிவுநீர் தொட்டி மரணங்கள்.. புள்ளி விவரம் சொல்வது என்ன?

நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 தொழிலாளிகள் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய சென்று உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் ஐந்து மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

கழிவுநீர் தொட்டி மரணங்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்து இருப்பதும் புள்ளி விவரங்கள் மூலமாக தெரிகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு 92 பேரும் 2018 ஆம் ஆண்டு 67 பேரும் 2019ஆம் ஆண்டு 116 பேரும் 2020ஆம் ஆண்டு 19 பேரும் கடந்த ஆண்டு 36 பேரும் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 2015ஆம் ஆண்டு 7 பேரும் 2018 ஆம் ஆண்டு 9 பேரும் 2019ஆம் ஆண்டு 13 பேரும் 2020ஆம் ஆண்டு 9 பேரும் கடந்த ஆண்டு 5 பேரும் உயிரிழந்தனர்.

image
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்தகைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய மரணங்களை தடுப்பதற்காக ஏற்கெனவே உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் 5,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில் இயந்திரத்திளான கருவிகளை பயன்படுத்த தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: ஆருத்ரா விவகாரம்: நிர்வாக இயக்குநர் உட்பட்ட ஐவரை கைது செய்ய இடைக்கால தடை! ஏன் தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.