மும்பை: பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் பூபிந்தர் சிங் மரணம் அடைந்தார்.மூத்த பாலிவுட் பாடகரும், இசை அமைப்பாளருமான பூபிந்தர் சிங் (82), பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந் தார். ஏற்கனவே அவருக்கு கொரோனா பாதிப்பும் இருந்தது. இதனால் பெரும் அவதிக்குள்ளான பூபிந்தர் சிங், நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், பாலிவுட் பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் பிறந்த பூபிந்தர் சிங் டெல் லியில் வளர்ந்தார். ஆல் இந்திய ரேடியோவில் தனது இசைப் பயணத்தை ஆரம்பித்து, பிறகு தூர்தர்ஷனில் பணி தொடர்ந்தார். பங்களா தேஷை சேர்ந்த மிதாலி முகர்ஜியை திருமணம் செய்த அவர், 1980ல் சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட்டு, மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். மிதாலி முகர்ஜியும் திரைப்பட பாடகிதான். தமிழில் 1981ல் மகேந்திரன் இயக்கிய ‘நண்டு’ படத்தில், இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘கைசே கஹுன்’ என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பூபிந்தர் சிங் பாடினார். இப்பாடலை பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீனி வாஸ் எழுதியிருந்தார்.