நாடளாவிய ரீதியில் நேற்று (18) தொடக்கம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல், பொதுவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பேணுதல் என்பனவற்றை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (18) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.