திஸ்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின அமிர்தப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா எனப்படும் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய கலாச்சாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அஸ்ஸாமில் அடுத்த மாதம் 13-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள், வர்த்தக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 80 லட்சம் தேசியக் கொடிகளை ஏற்ற அசாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.