டெல்லி : தமிழக அரசின் நீட் மசோதாவை உள்துறை அமைச்சகம் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசின் இரண்டு துறை கருத்துக்களுக்கு தமிழக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாகவும், பதிலை தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மக்களவையில் மதுரை எம்.பி வெங்கடேசன் கேள்விக்க ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.