பாட புத்தக சுமையை குறைக்க முடிவு; லோக்சபாவில் மத்திய அரசு தகவல்| Dinamalar

புதுடில்லி : கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட நேர விரயத்தை ஈடுசெய்யவும், தொடர்ச்சியான கற்றல் இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவர்களை மீட்டு எடுக்கவும், பாடப் புத்தக சுமையைக் குறைக்க, என்.சி.இ.ஆர்.டி., நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டதால், மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, லோக்சபாவில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அளித்த பதில்:மாணவர்களுக்கு கற்றலில் சிரமம் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால், பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் இருந்து, 2002 குஜராத் கலவரம், அவசரநிலை பிரகடனம், நக்சல் அமைப்புகள், முகலாய நீதிமன்றங்கள் உள்ளிட்ட பாடங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கடந்த மாதம் நீக்கியது.நீக்கப்பட்ட பாடங்களுக்கு பதில், ஆசிரியர்கள் துணையின்றி மாணவர்கள் தாங்களே எளிதாக கற்கக் கூடிய பாடங்கள் சேர்க்கப்பட்டன.

பல்வேறு வகுப்புகளிலும் இது போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மேலும், கொரோனா காலத்தில் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட நேர விரயத்தை ஈடுசெய்யவும், தொடர்ச்சியான கற்றல் இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவர்களை மீட்டு எடுக்கவும், பாடப் புத்தக சுமையைக் குறைக்க, என்.சி.இ.ஆர்.டி., நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.