பிரித்தானியாவில் ஷார்ட்ஸ் அணிந்ததற்காக பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிறுவன்!


வெப்ப அலையில் பிரித்தானியா அவதிப்பட்டுவரும் நிலையில், வகுப்பறைக்கு ஷார்ட்ஸ் அணிந்து சென்றதற்காக 14 வயது சிறுவன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40C (104F) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், பல பள்ளிகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டது, மற்ற சில பள்ளிகள் தங்கள் சீருடைகள் அணிவதில் தளரவை அறிவித்தன.

வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள ஹெக்மண்ட்வைக் கிராமர் பள்ளியில், பிளேசர்கள் மற்றும் டைகளை மட்டும் அகற்ற அனுமதிக்கும் வகையில் சீருடைக் கொள்கை தளர்த்தப்பட்டதக்க அறிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் ஷார்ட்ஸ் அணிந்ததற்காக பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிறுவன்! | Uk Heatwave School Boy Sent Home Wearing Shorts

மேலும், பள்ளி மாணவர்களை ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது.

இப்படி அனுப்பப்பட்டதும், “கிரே ஃபார்மல் ஷார்ட்ஸ் அனுமதிக்கப்படும் என்ற எண்ணத்தை அவர்கள் எனக்கு அளித்தனர்,” என்று அவர் கூறிய Alan Freeman என்பவர், தனது 14 வயது மகனுக்கு கால்ச்சட்டையை பாதியாக கிழித்து தைத்து, ஷார்ட்ஸாக மாற்றி, அதனை மகனுக்கு அணிவித்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

பிரித்தானியாவில் ஷார்ட்ஸ் அணிந்ததற்காக பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிறுவன்! | Uk Heatwave School Boy Sent Home Wearing Shorts

ஆனால், சிறுவன் முழுக்கால்ச்சட்டையை அணிந்துவரச் சொல்லி பல்லுயிரிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டான். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்தப் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அதிக வெப்பம் காரணமாக மகனுக்கு மிகவும் எரிச்சலாக இருந்த் காரணத்தினால் அரைக்கால்ச்சட்டை அணிவித்ததாக அவர் கூறினார்.ஆனால், மகன் திருப்பி அனுப்பப்பட்டது திகைப்பை ஏற்படுத்தியதாக கூறினார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.