இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் முக்கிய ஆசைகளில் ஒன்று கார். குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் இருக்கும் ஆசை, குடும்பத்தினரோடு பயணிக்க புதியதாக ஒரு சிறிய காரை வாங்க வேண்டும் என்பது தான்.
ஆனால் ஒரு காரை எப்போது வாங்கலாம்? அப்படி வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
இந்த 7 பங்குகளில் ஏதேனும் வச்சிருக்கீங்களா.. விரைவில் சர்பிரைஸ் உண்டு?!
எப்படி திட்டமிடுவது? அதற்காக பட்ஜெட்டினை எப்படி போடுவது? அதனை எப்படி வாங்குவது? உள்ளிட்டவற்றை பார்க்கலாம் வாருங்கள்.
திட்டமிடுங்கள்
- காருக்கான பட்ஜெட் எப்படி?
- 50:30:20 ரூல் ஆப் தம்ப்: 20:4:10 விதி
- கார் வாங்க இது சரியான தருணமா?
- காருக்கான பைனான்ஸ் எப்படி?
- ஒரு காரை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
பட்ஜெட் போடுங்கள்?
நீங்கள் ஒரு காரை வாங்க நினைக்கிறீர்கள் எனில், முதலில் பட்ஜெட்டினை போடுங்கள். முதலில் இது பட்ஜெட்டுக்கு ஏற்றதா? இது மேற்கொண்டு உங்களை பிரச்சனைக்கு தள்ளிவிட கூடாது. நீங்கள் செய்யும் சிறு தவறு கூட, உங்களது மொத்த நிதி பரிவர்த்தனையையும் பாதிக்கலாம். ஆக உங்களது பட்ஜெட்டுக்குள் கார் அடங்குமா? என்பதை பாருங்கள்.
எந்த வகையான முதலீடு?
நீங்கள் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கும் காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடும் மிக முக்கியமானது. நீங்கள் செய்யும் மிகப்பெரிய முதலீடு வளர்ச்சி காணக் கூடியதா? அல்லது மதிப்பு குறையக் கூடியதா என்பதையும் திட்டமிடுங்கள். உதாரணத்திற்கு தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் எனில் அது எதிர்காலத்தில் வளர்ச்சி காண கூடியது. இதே கார் எனில் அது தேய்மானம் சம்பந்தப்பட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து உங்கள் காரின் மதிப்பு குறையும். கூடுதலாக செலவும் அதிகரிக்கும். ஆக ஒரு காரை வாங்கும் முன்பு இதனை திட்டமிடுங்கள். ஒரு பெரிய தொகையை செலவிடும் முன்பு பட்ஜெட் போடுங்கள்.
20:4:10 விதிகள்
20:4:10 விதிகள்: உங்களது பட்ஜெட்டில் 20% மதிப்பு இருக்க வேண்டும். அதாவது உங்களது காரின் ஆன் தி ரோடு மதிப்பில் 20% டவுன் பேமெண்ட்டாக கட்ட வேண்டும். இதனை உங்களால் செலுத்த முடியுமா? என்பதையும் பாருங்கள்.
அடுத்ததாக 4 ஆண்டுகள் நீங்கள் மாத தவணை செலுத்த வேண்டியிருக்கும். ஆக இது சாத்தியமானதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
10 என்பது உங்கள் வருமானத்தில் 10% ஆவது நீங்கள் மாத தவணையாக செலுத்த வேண்டும் என்பது தான். ஆக இதனை உங்களால் சரியாக செய்ய முடியுமா? என்பதை கணக்கிட்டு பாருங்கள்.
பட்ஜெட் விதி 50:30:20
இந்த சமயத்தில் கட்டாயம் 50:30:20 என்ற விதிகளை பார்க்க வேண்டும். இதில் 50 என்பது உங்களது தேவைக்காக ஒதுக்க வேண்டும். அதாவது அத்தியாவசிய தேவைகள், வீடு, ஹெல்த்கேர், கல்வி கட்டணம் என வைத்துக் கொள்வோம்.
30: என்பது வேண்டும் என்பதில் தான் கார், ஷாப்பிங், ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது, பொழுதுபோக்குக்காக செலவிடுவதாக இருக்க வேண்டும்.
20: என்பதை கட்டாயம் சேமிப்பாக இருக்க வேண்டும். இது தான் 50:30:20 என்ற பட்ஜெட் விதியாகும். இதில் மேற்கொண்ட 30 என்ற பகுதியில் தான் மேற்கண்ட 20:4:10 என்ற விதியும் அடங்கும். ஆக அதனையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கார் வாங்க இது சரியான தருணமா?
உங்களுக்கு கார் வாங்க இது சரியான நேரமா? இது தற்போதைய சமயத்தில் அவசியமானதா? என பாருங்கள். நிபுணர்கள் 6 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் இருக்குமேயானால், அவர்கள் கார் வாங்குவதை தவிர்க்கலாம். ஏனெனில் அவர்களுக்கு பல கடமைகள் இருக்கும். ஆக இது அவசியமானதா? என்பதை யோசிக்க வேண்டும். இல்லையெனில் இதனால் மற்ற முக்கிய விஷயங்களை செய்ய முடியாமல் போகலாம். கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இது மேற்கொண்டு வட்டி என செலவினங்களை அதிகரிக்கும். ஆக இது உங்களுக்கு அவசியமானதா? அல்லது சொகுசு தேவைக்காக வாங்குகிறீர்களா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
டவுன்பேமெண்ட் எப்படி?
உங்கள் காருக்கான 1,20,000 டவுன்பேமெண்ட் எப்படி? இதற்காக நீங்கள் மாதம் உங்கள் மாத சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையினை சேமிக்க வேண்டியிருக்கும்.
உதாரணத்திற்கு உங்களது வருட சம்பளம் 6 லட்சம் என வைத்துக் கொள்வோம், உங்களது மாத வருமானம் 58 ஆயிரத்திற்கும் மேல். நீங்கள் உங்கள் காருக்கான டவுன் பேமெண்டினை மாதம் 30% அல்லது மாதம் 17,500 ரூபாய் சேமிக்க வேண்டும். இப்படி 7 மாதம் சேமிக்கும்போது 1.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
காரை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்?
காரை வாங்குவதற்கு நிதி ரீதியிலாக மட்டும் அல்லாது, இன்னும் சில விஷயங்கள் கவனிக்க வேண்டியதாக உள்ளது.
அது பெட்ரோல், டீசல் செலவு, இன்சூரன்ஸ், சர்வீஸ் கட்டணங்கள்,. பார்க்கிங் கட்டணங்கள் என தொடர்ந்து செலவினங்கள் இருக்கும். ஆக இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் குடும்பத்திற்கு கட்டாயம் கார் தேவையா என்பதை முதலாவதாக தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
பைனான்ஸ் எப்படி?
நீங்கள் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தால் காரை வாங்கும் முன்பே அதற்காக முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு எஸ் ஐ பி-யிலேயே அல்லது வேறு ஏதேனும் எஃப்டி-யில் முதலீட்டினை செய்து வைக்கலாம். ஆக அதன் மூலம் மாத தவணை இல்லாமல் சொந்தமாக கார் வாங்க முடியும்.
இதே தொழிலதிபர் எனில் என்னால் கட்டாயம் கார் வேண்டும். மாத வருமானம் அதிகம் எனில், அதற்காக கார் வாங்கலாம். ஆக எதனையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து முடிவு செய்வது நல்லது.
when should you buy your 1st car? See what the experts are saying?/உங்களது முதல் காரினை எப்போது வாங்கணும்.. வாங்கும் முன்பு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
when should you buy your 1st car? See what the experts are saying?
when should you buy your 1st car? See what the experts are saying?/உங்களது முதல் காரினை எப்போது வாங்கணும்.. வாங்கும் முன்பு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?