எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பேருந்து கட்டணங்களை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிரான்டா தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் விலை குறைப்பிற்கு ஏற்ற வகையில் விலைகளை குறைப்பதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பான பரிந்துரை நேற்று போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்! வெளியான அறிவிப்பு |
பேருந்து கட்டண குறைப்பிற்கான பரிந்துரை
இதேவேளை, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும், அதற்கான பரிந்துரைகள் வரும் வரையில் காத்திருப்பதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருவதுடன், புதிய பேருந்து கட்டணம் இன்று முற்பகல் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.