பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில்  இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி,  இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் காரணமாக, ராஜபக்சே குடும்பத்தினர் பதவிகளை ராஜினாமா செய்து தலைமறைவான நிலையில், அதிபராக இருந்த கோத்தபயவும், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை தற்காலிக அதிபராக உள்ள  ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

தான் பிரதமராக பதவி ஏற்ற மே 13ந்தேதி தினசரி 5மணி நேர மின்வெட்டு இருந்தது. அதை 3மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்தளாகவும்,  உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடும் தீர்க்கப்பட்டது  என தெரிவித்து உள்ளார்.

நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களில் பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும்.

எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும். ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும்”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.