போராட்டக்காரர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்த கோடிக்கணக்கான பணம்! பொய்யான தகவல் என்று அறிவிப்பு


காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு போராட்டக்காரர்கள்  நான்கரை கோடி ரூபா பெற்றதாக சுமத்தப்படும்  குற்றச்சாட்டு  பொய்யானது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர்.

புதிதாக  ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் பணம் 

போராட்டக்காரர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்த கோடிக்கணக்கான பணம்! பொய்யான தகவல் என்று அறிவிப்பு | Crores Of Cash Flowed Into The Protesters

கொழும்பு காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சமூக ஊடக ஆர்வலர்களான ரட்டா, திலான் மற்றும் கொனார ஆகியோர் கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அரச வங்கி மூலம்  இந்தத் தொகையைப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

யூனியன் பிளேஸில் உள்ள அரச வங்கியொன்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கணக்கொன்றிற்கு இவ்வாறு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டதாகவும், இந்த மூவரும் அதனைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.