மும்பை: முதல்வர் ஷிண்டேவுக்கு 12 சிவசேனா எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள், முதல்வர் ஷிண்டேயுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்பிக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் 18 சிவசேனா எம்பிக்களில் 14 எம்பிக்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், 14 எம்பிக்கள் என்பதை சிவசேனா மாநிலங்களவை எம்பியும் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவுத் மறுத்துள்ளார் அவர் அளித்த பேட்டியில் 6 அல்லது 7 எம்.பி.க்கள் எங்களுடன் இருக்கும் போது 14 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டேயுடன் ஆலோசனை நடத்தியதாக எப்படி கூற முடியும்? ஏக்நாத் ஷிண்டேயுடன் ஆலோசனை நடத்திய சிவசேனா எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனறார். ஷிண்டேயுடன் ஆலோசனை நடத்திய 12 சிவசேனா எம்.பி.க்கள் இன்று சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தங்களை தனி அணியாக அங்கீரிக்க வேண்டும் என்று கோர உள்ளதாக கூறப்படுகிறது.