கொழும்பு,
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என்று தெரிய வந்துள்ளது. இதை இலங்ைக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதிவரை, இலங்கைக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது.
இதில், இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் அளித்துள்ளது. இது மொத்த கடனில் 39 சதவீதம் ஆகும். அடுத்தபடியாக, ஆசிய வளர்ச்சி வங்கி, 35 கோடியே 96 லட்சம் டாலர் (ரூ.2 ஆயிரத்து 876 கோடி) கடன் அளித்து, 2-வது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்த இடத்தில் உலக வங்கி உள்ளது. சீனா, மொத்த கடனில் 7 சதவீதம் மட்டுமே அளித்துள்ளது.