இந்திய மாநிலம் கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றனர். அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவர்களை தனித்தனியே பரிசோதித்துள்ளனர்.
அப்போது Metal Detector கருவியை கொண்டு மாணவிகளை பரிசோதித்த அதிகாரிகள், உள்ளாடையில் உள்ள கொக்கி கருவியை எச்சரிக்கை செய்ததால் அவற்றை அகற்றும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் செய்வதறியாது விழித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ அவற்றை அகற்றாவிட்டால் மையத்திற்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றும், எதிர்காலம் முக்கியமா அல்லது உள்ளாடை முக்கியமா என்பது போல் பேசியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மாணவிகள் உள்ளாடையை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia
இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் குறித்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்த விடயம் பெரும் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாவட்ட பொலிசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
HT photo